கிள்ளான் ஶ்ரீ ராசி பட்டுமாளிகையில் சிறப்பு விலை விற்பனை உரிமையாளர் கே.எஸ். மணியம் தகவல்

கோவிட்-19 தாக்கத்தை கட்டுபடுத்தும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்சிஓ) பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்சிஓ காலகட்டத்தில் அனைத்து வர்த்தகங்களும் முடங்கி விட்டன. வர்த்தகர்கள் பலர் சொல்லணா துயரங்களை எதிர்நோக்கி வந்த வேளையில் அரசாங்கம் மே 4ஆம் தேதி தொடங்கி சில நிபந்தனைகளுடன் வர்த்தகத்தை தொடங்கலாம் என்ற அறிவிப்பு வர்த்தகர்களுக்கு குறிப்பாக கிள்ளான் ஜாலான் துங்கு கிளானா வர்த்தகர்களுக்கு நிம்மதி மூச்சினை வரவழைத்தது.

வாடிக்கையாளர்களின் நலன் மிகவும் முக்கியம் என்பதனை கருத்தில் கொண்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து நேற்று தொடங்கி (மே 6) வர்த்தகத்தை தொடங்கியிருக்கின்றனர்.

நேற்று வர்த்தகம் தொடங்கியது குறித்து கிள்ளான் ஶ்ரீ ராசி பட்டு மாளிகை உரிமையாளர் கே.எஸ்.மணியம் கூறுகையில் எங்கள் பணியாளர்களின் ஊதியம், உணவு, தங்குமிட வசதி அனைத்தும் செய்து கொடுக்க வேண்டிய இருந்தாலும்  அரசாங்கம் அறிவித்த எம்சிஓவிற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கினோம்.

நாங்கள் எப்பொழுதும் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறைக் கொண்டவர்களாக இருந்து வருகிறோம். இப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் சூட்டை பரிசோதிக்கிறோம். மேலும் பலர் தங்களின் தேவைக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஏறக்குறைய 1 ½ மாதங்களாக பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் வாடிக்கையாளர்களின் கஷ்டங்களை மனதில்கொண்டு அவர்களின் நலனுக்காக தரமான ஜவுளிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சிறப்பு கழிவு விலையில், அதாவது ஏற்கெனவே வாங்கிய விலையை காட்டிலும் சிறப்பு கழிவு  விலையில் வழங்கவும், அன்னையர் தினத்தை முன்னிட்டு மேலும் சிறப்பு கழிவுகள் வழங்க ஶ்ரீ ராசி பட்டுமாளிகை முடிவு செய்திருக்கிறோம்.

வாடிக்கையாளர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி சிறப்பு கழிவு விலையில் தங்கள் இல்லத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார் ஶ்ரீ ராசி பட்டுமாளிகையின் உரிமையாளர் கே.எஸ்.மணியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here