ஜின்ஜாங் உத்தாரா பகுதியில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 6 பேர் போலீசாரால் கைது

கோலாலம்பூர்: ஜின்ஜாங் உத்தாராவில் இரண்டு பேர் காயமடைந்த சச்சரவு தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஏசிபி டத்தோஶ்ரீ மஸ்லான் லாசிம் கூறுகையில், ஆறு பேரும், 21 முதல் 24 வயதுடையவர்கள், காயமடைந்தவர்கள் இருவரும் 24 வயதுடையவர்கள். அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து சண்டை நடந்ததாக நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து செலயாங் மருத்துவமனை அனுப்பப்பட்டார், மற்றவர் தலையில் சிறிய வெட்டுக்காயங்களுக்கு ஆளானார் என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (மே 8) இரவு 9.30 மணியளவில் இந்த சண்டை குறித்து போலீசாருக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார். ஜாலான் தேபிங் திமூரில் உள்ள ஒரு கடைக்கு முன்னால் சண்டை ஏற்பட்டது. சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக   நம்பப்படும் மோட்டார் சைக்கிள், ஹெல்மெட், ஒரு தடி (கட்டை) மற்றும் சில ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர்  மீது  வன்முறைக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களின் பதிவு இருக்கிறது என்று  மஸ்லான் கூறினார். சந்தேக நபர்கள் மே 9 முதல் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் செய்யப்பட்டுள்ளனர். தண்டனைச் சட்டத்தின் 326 மற்றும் 148 பிரிவுகளின் கீழ் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருப்பதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here