பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிய கட்டுப்பாடு அமல்

பிரான்ஸ் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த தொடங்கியுள்ள நிலையில் தலைநகர் பாரிஸ் மெட்ரோ சுரங்க ரயிலில் இப்போது   கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேலும் பயணிகள் அவசர நேரத்தில் ஏன் பயணிக்கிறார்கள் என்பதை விளக்க அவர்களின் முதலாளிகளிடமிருந்து சான்றிதழ்கள் பெற வேண்டியது கட்டயமாக்கப்பட்டுள்ளது..

பயணிகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று பாரிஸின் அரசுக்கு சொந்தமான பொது போக்குவரத்து கழகமான RATP-ன் செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் RATP பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படும். பிரெஞ்சு சுற்றுசூழல் அமைச்சர் எலிசபெத் போர்ன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது, 11 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பிரான்சில் முகமூடிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, FFP2 வகை வடிகட்டுதல் முகமூடிகள், அறுவை சிகிச்சை முகமூடிகள் குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி, வீட்டில் தயாரிக்கக்கூடிய பொதுவான பயன்பாட்டிற்கான முகமூடிகள். இவை அனைத்தும் பாரிஸ் மெட்ரோவில் பயன்படுத்த ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here