ஜோர்ஜ்டாவுன் ,மே 15 –
பெற்றோர்களுக்கு பயந்து பிறந்த குழந்தையை 4வது மாடியிலிருந்து வீசிய பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டான்.
நேற்று இரவு 8.40 மணியளவில் பினாங்கு பாயான் பாரு காவல் நிலையத்தில் அந்த இளைஞன் கைது செய்யப்படட்டதாக தென்மேற்கு மாவட்ட காவல் துறை தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வை முடித்த 18 வயது நிரம்பிய இந்த இளைஞன், பினாங்கு பாயான் லெப்பாசில் தங்கியுள்ளதாக தெரிய வந்தது.
மேலும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் கிளாந்தானில் இருப்பதாகவும் கடந்த புதன்கிழமையன்று இச்சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த பெண் இங்கு உடன்பிறந்தோருடன் தங்கியிருந்ததாக தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் உடன்பிறந்தோருக்கு அவர் கர்ப்பாமான தகவல் எதுவும் தெரியாது என்பதும் தெரியவந்தது.
வீட்டின் கூரையின் மேல் விழுந்த அந்த குழந்தையின் மண்டை ஓடு மற்றும் கல்லீரலில் காயம் ஏற்பட்டு பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.