புடுவில் முள்வேலி பகுதி ஊரடங்கு அமல்!

கோலாலம்பூர், மே. 15-

 

கோலாலம்பூர் ஜாலான் புடுவில் பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 18 பேருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து தப்பாமல் இருக்கு அப்பகுதி முழுவதும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.

 

ஜாலான் புடு, ஜாலான் புடு புரூணை, ஜாலான் கஞ்சில், ஜாலான் லண்டாக் ஆகிய இடங்களில் ராணுவத்தினர் முள்வேலிக் கம்பிகளை அமைத்துள்ளனர். கோலாலம்பூரில் 18 பேருக்கு தொற்று நோய் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்கள் அனைவரும் புடு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாரும் தப்பாமல் இருக்க முள்வேலிக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 

 

தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் புடு பகுதியில் மியான்மார், வங்காளதேச தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களிடம் கேவிட் 19 தொடர்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

 

இங்கு குடியிருக்கும் மக்கள் வேளியில் செல்ல முறையான காரணங்கள் இருக்க வேண்டும். அதோடு போலீஸாரின்  அனுமதியுடன் தான் அவர்கள் அங்கிருந்து வௌயில் செல்ல முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.

 

இதனிடையே, ஜாலான் புடுவிலுள்ள டி மெஜஸ்டிக் பேளஸ் ஹாட்டல் அருக்கிலுள்ள பகுதியில் இருந்து ஜாலான் லண்டாக் வரை முன்வேலிக் கம்பிகள் அமைக்கும் பணியில் நேற்று இரவு ராணுவத்தினர், போலீசார் நிருபர்களிடம் 

தெரிவித்தனர்

 

 

இது ஒரு பொது முடக்கம் அல்ல. ஆனால் நடமாட்டக் கட்டுப்பாட்டை பலப்படுத்தப்படுகிறது. சௌகிட் சந்தையில் செய்ததைப் போன்மறது என்று கோலாலம்பூறர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here