யூடியுப் சமயலில் கலக்கும் தம்பதியருக்கு பிரதமர் பரிசு

ஈப்போ, மே 16-

இந்தியர்களின் பாரம்பரிய சமயல் கலைகளை யூடியுப் செனலில் பதிவேற்றம் செய்வதோடு சமையல் குறிப்புகளையும் வழங்கும் சுகு, பவித்ரா தம்பதியருக்கு பிரதமர் பரிசு அனுப்பினார்.

தங்களின் சமயல் கலை மூலம் மலேசியா மட்டும் இன்றி உலக நாடுகள் வரை பிரபலமாகியிருக்கும் இத்தம்பதியரின் முயற்சிகளை பாராட்டி பிரதமர் வாழ்த்து கூறியதோடு அவர்களின் இல்லத்திற்கு பரிசுகளையும் அனுப்பி வைத்துள்ளார்.

28 வயது நிரம்பிய எஸ்.பவித்ரா கூறுகையில், வீட்டிற்கு பரிசு பொட்டலம் வந்ததும் நானும் என் கணவர் எம்.சுகுவும் (வயது 29) அதிர்ச்சியடைந்தோம்.

அப்பரிசு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அனுப்பியதாக கூறியவுடன் நாங்கள் அதிர்ச்சியில் உரைந்தே போனோம். அப்பரிசில் ஒரு வாழ்த்து அட்டை இருந்தது. அதில் பிரதமர் கையெழுத்து என எதுவும் இல்லை. அதனால் இது பிரதமரிடம் இருந்து வருவில்லை என நினைத்துக் கொண்டோம்.

பின்னர் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. நாங்கள் அனுப்பிய பரிசுகள் வந்து சேர்ந்தனவா என்று கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தாக பவித்ரா கூறினார்.

கேமராவை பொருத்தும் கருவி, அணலி மற்றும் சமயலுக்கு தேவையான பொருட்களுடன் வாழ்த்து அட்டையில் தொடர்ந்து நற்காரியங்களை செய்யுங்கள், வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

தமது சமயல் வீடியோக்களை ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் கண்டுகளிக்கின்றனர். இதுவே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாகும் என்று பவித்ரா கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் இத்தம்பதியர் தங்கள் சமையல்களை யூடியுப் மூலம் வெளியிட்டனர். இதுவரை 40,000 பேர் அவர்களை யூடியுப் பக்கத்தை பார்க்கின்றனர். அதோடு யூடியுப்பில் பிரபலமும் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here