கோத்தா கினாபாலு: 2018 ஆம் ஆண்டில் தனது சொந்த மகளை (13) பாலியல் பலாத்காரம் செய்த ஒரு இராணுவ வீரருக்கு 23 வருடங்கள் சிறைத்தண்டனையும், 15 பிரம்படிகளும் வழங்க செஷன்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
குற்றத்தை செய்ததை நிரூபித்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிபதி எல்சி பிரிமஸ் இத்தண்டனையை வழங்கினார்.
தொடர்ந்து வழக்கின் தீர்ப்பில், நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி எல்சி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது 13 வயது மகளை ஏப்ரல் 7, 2018 அன்று காலை 9 மணியளவில் பாப்பாரின் லோக் காவியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (3) ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் கிடக்க வழி செய்கின்றது.
வழக்கறிஞர் டத்தோ ஸ்ரீ ரக்பீர் சிங் குற்றவாளியின் தரப்பு வக்கீலாக ஆஜராகியிருந்தார். சிறைவாசம் முடிந்ததும் இரண்டு ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் அவரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தரப்பு 9 சாட்சிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 3 பேரையும் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















