கொரோனா என்பது மக்களுக்கான சவால்

கொரோனா பாதிப்பால் நலிவடைந்திருக்கும் பொறுளாதாரம் வணிகத்துறைகளை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வணிகத்துறை வளம் குன்றினால் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும். ஆதலால் வணிகத்துறைக்கு உதவும் திட்டத்தை அரசாங்கம் ஆராயவேண்டும் என்று மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியிருக்கிறார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் 260 பில்லியன் நிதியை பிரிஹாத்தின் பொருளாதார உதவிநிதியாக வழங்கியிருக்கிறது. இதன் பலன் உணரப்படவேண்டும். அப்போதுதான் அது பயனுடையதாக வெளிப்படும்.

அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம். ஒத்துழைப்பு இல்லாமல் சவால்களைத் தீர்க்க முடியாது என்கிறார் மாமன்னர். நாட்டின் எத்தனைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பும், அரசு ஒத்துழைப்பும், பிற துறைகளின் ஒத்துழைப்பும் இல்லாவிடால் எதிலும் வெற்றிபெற முடியாது என்று நாட்டின் 14 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தின் மூன்றாம் கட்டத்தொடரின் உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று என்பது கொடூரமான நோய். அதை எதிர்கொள்வது சவால் மிக்கது. இதிலிருந்து மீள்வதும் பொருளாதாரத்தைக் காப்பதும் சாதாரணமானதல்ல. இக்கூற்று நாட்டின் மீதுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுவதாக இருக்கிறது.

கோவிட்- 19 மக்களையும் தொழில்களையும் முடக்கிப் போட்டிருக்கிறது. முடக்கிப்போட்டதிலிருந்து எழுந்து நிற்கவேண்டும். அதற்கு தியாக உணர்வு மிகுதியாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறார் மாமன்னர்.
மக்கள் ஒத்துழைப்பில்லாமல் நடைமுறைசாத்தியம் வெற்றிபெறாது என்பதை மான்னரின் பேச்சு நிலைப்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here