சரவாக், சபா, புத்ராஜெயா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இன்று பிற்பகல் 5 மணி வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் மோசமான வானிலை ஏற்படும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை ஜோகூர், தாங்காக், சிகாமாட், மூவார், பத்து பஹாட் மற்றும் மெர்சிங் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.








