யார் நிர்வகித்தால் என்ன? மித்ரா பணம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர், மே 18-

மித்ரா எனப்படும் இந்தியர்களின் உருமாற்றத் திட்டப் பிரிவை எந்த அமைச்சர் நிர்வகித்தாலும் மஇகாவுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

மித்ரா மஇகா நிர்வகிப்பின் கீழ் வருமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மித்ராவில் கிட்டத்தட்ட 258 மில்லியன் பயன்படுத்தப்படாமல் இருந்தன. இந்தியர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மானியம் சமுதாயத்தின் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே மஇகாவின் நிலைப்பாடு.

தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மாணவர்களை நல் வழிப்படுத்தும் கருத்தரங்குகள், பயிற்சிகள் போன்றவற்றை நடத்த மித்ராவிடம் மஇகா மனு செய்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், மஇகாவுக்கு ஒரு முழு அமைச்சர் பதவவி மட்டுமே வழங்கி இருப்பதில் பிரச்சினை இல்லை. பதவி இல்லாமலும் மஇகா அதன் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
பதவிக்காக மஇகா யாரிடமும் போய் நிற்கப் போவதில்லை.

ஆனால், செனட்டர் மூலம் மஇகாவுக்கு அரசாங்க பதவிகளுக்கு கோரிக்கை விடுக்கும் மனுவை பிரதமரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். அவரிடமிருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here