கோலாலம்பூர்:
மலேசியாவிற்கு 6 துப்பாக்கிகளை கடத்தியதாகவும், 158 தோட்டாக்களை வைத்திருந்ததாகவும் இஸ்ரேலிய நாட்டவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இஸ்ரேலியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இக்குற்றசாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இந்நபர் குற்றசாட்டை எதிர்நோக்கியிருக்கிறார்.
நீதிபதி தஸ்மின் அபுபக்கார் அந்த இஸ்ரேலிய நபருக்கு ஜாமின் அனுமதிக்கவில்லை.
வரும் மே 21ஆம் இவ்வழக்கு மீண்டும் செவிமடுக்கப்படும்.
























