கொரோனாவிலிருந்து விடுபட்டது சிரம்பான் சந்தை

சிரம்பான், மே 19-

சிரம்பான் சந்தை கொரோனா பிடியிலிருந்து முற்றாக விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கி வழக்கம்போல சிரம்பான் சந்தை செயல்படும், பொதுமக்கள் எந்த விதமான ஐயப்பாடுகளுமின்றி சந்தைக்கு வரலாம் என சிரம்பான் டத்தோ பண்டார் டத்தோ சசாலி சலேவுடின் அறிவித்துள்ளார்.

சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 618 வியாபாரிகளுள் 85 பேர் மட்டுமே சில காலங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள், நாளை காலை 6 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையில் சந்தையில் வியாபாரம் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் ஐயப்பாடு எதுவுமின்றி சந்தைப் பொருட்களை வாங்க வரலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here