திரங்கானு, மே 19-
திரங்கானு மாநிலத்தை ஒட்டிய கடல் பகுதியில் உலா வந்த 50 வியட்னாமிய மீனவக் கப்பல்கள் மலேசிய கடற்படை வீரர்களால் விரட்டியடிக்கப்பட்டன,
கொவிட் 19 காலத்தை ஒட்டிய தீவிர நடவடிகைகளின் ஒரு பகுதியாக மீனவக் கப்பல்கள் விரட்டியடிக்கப்பட்டதாக திரங்கானு கடற்படை கேப்டன் முகமட் சுபி முகமட் ரம்லி தெரிவித்தார்,
தென் சீனக் கடலின் மலேசியக் கடற்பகுதியை ஊடுருவிய கப்பல்கள் கட்டங் கட்டமாக அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டன, தென் சீனக் கடற் பகுதியின் மலேசிய எல்லையைக் காக்க வேண்டிய கடப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக சுபி தெரிவித்தார்.