முதலில் பயிற்சியை தொடங்கிய இளம் வீரர்! கடும் கோபத்தில் பிசிசிஐ

இந்தியாவில் இளம் வீரர் ஒருவர், பிசிசிஐயின் அனுமதியில்லாமல் பயிற்சி மேற்கொண்டு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால், வீரர்கள் வீட்டிற்குள்ளேயே பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

பிசிசிஐயும் இந்திய வீரர்களை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும்,வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது பிசிசிஐ. அதற்காக ஸ்மார்ட்போன் ஆப் கூட தயாரித்துள்ளது.

தொடர்ந்து போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்து வருகிறது. அடுத்ததாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ காய் நகர்த்தி வருகிறது. அதற்கு மிக விரைவில் இந்திய வீரர்களை பயிற்சி மேற்கொள்ள வைக்க திட்டம் வகுத்து வருகிறது.

இந்த நிலையில், மும்பை மாநிலத்தை சேர்ந்த இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் சனிக்கிழமை அன்று தன் சொந்த மாவட்டமான பால்கரில் உள்ள மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியை தொடக்கிய முதல் இந்திய வீரர் என செய்திகளும் வெளியாகின.

இந்த நிலையில், ஷர்துல் தாக்குர் பிசிசிஐயின் அனுமதியைப் பெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. ஷர்துல் தாக்குர் பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற வீரர் ஆவார். கிரேடு “சி”யில் அவர் இடம் பெற்றுள்ளார். அவர் இந்த சமயத்தில் பிசிசிஐ அனுமதி பெற்றே வீட்டை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது

எனவே பிசிசிஐ அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் மும்பையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், தான் ஷர்துல் தாக்குர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here