நயன்தாராவுக்கு இருக்கும் கெட்ட பழக்கம்

நயன்தாரா பற்றிய ஒரு சீக்ரெட் ஆன விஷயத்தை பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்சினி எனும் டிடி மனம் திறந்து கூறியுள்ளார். டிடியை போலவே கேரளாவில் டயானா மரியம் குரியன் எனும் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நயன்தாரா.

இந்த லாக்டவுன் நேரத்தில் பல விதமான புகைப்படங்களை பதிவிட்டு அசத்தி வரும் தொகுப்பாளினி டிடி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு சாட்டில் நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான மனசின்னக்கரே படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த நயன்தாரா, 2005ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகியில் நடித்த நயன்தாரா பல ஹிட் படங்களில் நடித்தும் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்தும் அசத்தி வருகிறார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால், ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனது வசீகரத்தால் நம்பர் ஒன் நாயகியாக கலக்கி வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் முதல் படமாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் அண்ணாத்த படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தோழி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் கலக்கி வரும் லேடி சூப்பர்ஸ்டார், தனது தோழிகளுடன் அதிகமான நேரத்தை செலவிடுவது வழக்கம். விஜய் டிவியின் தொகுப்பாளினி மற்றும் நடிகையான திவ்ய தர்ஷினியும் நயனின் பாசமான தோழி தான்.

சமீபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற சாட் செஷனில் நயன் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை கூறியுள்ளார். மனசுல எதையும் வச்சுக்க மாட்டார் நயன்தாரா ரொம்பவும் நல்ல உள்ளம் கொண்டவர், நைஸ் பெர்ஸன், மனசுல எதையும் தேக்கி வச்சுக்க மாட்டார்.

வெளிப்படையா பேசும் தன்மைக் கொண்டவர். நேரத்தை வீணடிக்க மாட்டார். தனக்கு எது சரியென படுகிறதோ அதனை செய்ய தயங்கமாட்டார். மத்தவங்களுக்கு உதவணும்னு எப்போதுமே நினைப்பவர் என டிடி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். கெட்ட பழக்கம் என்னன்னா யார் மேலயாவது நடிகை நயன்தாராவுக்கு கோபம் இருந்தால், அதை அப்படியே மனசுல வச்சுக்கிட்டு போலியா அவங்க கிட்ட பேசுறதோ இல்ல, நடிக்கவோ மாட்டார். நேரடியா அந்த நபருக்கு போன் போட்டு, நீங்க செஞ்ச இந்த விஷயம் எனக்கு பிடிக்கலன்னு உங்க மேல எனக்கு இதனலாதான் கோபம்னு பளிச்சுன்னு சொல்லிடுவார். இது தான் அவர்கிட்ட இருக்க கெட்ட பழக்கமும், வேற யார் கிட்டயும் இல்லாத நல்ல பழக்கமும் என திவ்யதர்ஷினி நயன் குறித்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here