உலக மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானோர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர்.
உலகிலுள்ள மொத்த நீரில் நமக்கு கிடைக்கும் நன்னீர் 0.5%-க்கும் குறைவு. எஞ்சிய நீர், துருவங்களில் பனிக்கட்டியாகவும், கடல் நீராகவும் உள்ளது. 2020-இல் உலக அளவில் 40 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்னீர் பூமியில் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் வியாபித்திருக்கிறது. இருப்பினும், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானோர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை காட்டிலும் 8 மடங்கு வேகத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
நிலத்தடி நீருக்கு ஒரு மீட்சி எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவு வரை கீழே இறங்கிய பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். நீர் மட்டத்தை இந்த எல்லைக்கு கீழே தொடர்ச்சியாக இறங்கச் செய்தால், பின் முந்தைய நீர் மட்ட நிலைக்கு வர இயலாமல் போய்விடும்.
தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் மொத்த நிலப்பரப்பில் பூமிக்கு அடியில் 73 சதவீதம் திடப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளன. எஞ்சிய 27 சதவீதத்தில் அடிப்பரப்பு படிவு பாறைகளால் அமைந்துள்ளது. திடப்பாறை படிவுகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
படிவுப்பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நிறைந்ததாக இருக்கும். பொதுவாகவே தமிழ்நாட்டில் நில அமைப்பின் காரணமாக நிலத்தடி நீர் வளங்கள் போதுமானதாக இருப்பதில்லை. மழை அளவு பொதுவாக கடந்த 10 வருடங்களில் வெகுவாக குறைந்து வருகின்றது அல்லது குறைந்த காலத்தில் மிகுதியான மழை பெய்து வெள்ளம் அதிகமாகி கடலில் கலக்கின்றது.
ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கையும் ஆழமும் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் நிலத்தடி நீர் உட்புகும் பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைவு மற்றும் ஆறுகளில் நீர்வரத்து குறைவு அல்லது குறைந்த காலம் மட்டுமே தண்ணீர் வருவது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் பெருமளவு சேகரமாவதில்லை.
தற்போது நிலவி வரும் நிலத்தடி நீர் பற்றாக்குறையினால் அதிக அளவு ஆழம் வரை ஆழ்துழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் செலவு அதிகம் என்பதாலும், பணவிரயத்தை தவிர்க்கவும் பழங்கால முறைகளில் தவறுகள் நேர்ந்தாலும் மக்கள் அதிநவீன கருவிகள் மூலம் நிலத்தடி நீர் கண்டறிவதில் முயன்று வருகின்றனர்.
மிகவும் அதி நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக இண்டோஜியோ நிறுவனம் நிலத்தடி நீரை மிகவும் துல்லியமாக கண்டறிந்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட நில அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகள் கொண்ட நிறுவனம்தான் இண்டோஜியோ.