இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனராக திரும்புகிறார். அவர் கடைசியாக இயக்கிய படம் லிங்கா. ரஜினி அதில் ஹீரோவாக நடித்து இருந்தார். அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். கன்னடத்தில் கோடிகொப்பா 2, மற்றும் தெலுங்கில் ஜெய் சிம்ஹா, ரூலர் ஆகிய படங்களை தான் அவர் லிங்காவிற்கு பிறகு இயக்கி உள்ளார்.
தற்போது ஆறு வருடங்கள் கழித்து தமிழில் சத்யராஜ் நடிப்பில் ஒரு படத்தினை அவர் இயக்குகிறார் என அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தான் இந்த படத்தினை தயாரிக்கிறார். சத்யராஜ் மட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக சம்பளத்திற்க்கு பதில் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு படம் வெளியான பிறகு வரும் லாபத்தில் பங்கு அளிக்கப்படும். இது படம் தியேட்டர்களில் வரும் வருமானத்தை பொறுத்து இருக்கும் என்றும் தெரியவந்தது.
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆகியவற்றில் ஏற்கனவே இந்த முறை அதிகம் பிரபலமாக உள்ளது. தற்போது தமிழ் சினிமாவிலும் இப்படி துவங்கியிருப்பதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா லாக்டவுனால் அதிக அளவு தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருடம் நிலையில் இதுபோன்ற விஷயங்கள் சினிமா துறையை காப்பாற்ற உதவும் என அவர்கள் கருதுகின்றனர்.
தயாரிப்பாளர்கள் அதிக நஷ்டத்தை சந்திப்பதால் முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் ஏன் கேட்டு வருகின்றனர். அதை ஏற்று விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் போன்ற பல நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். ஆனால் டாப் ஹீரோக்கள் யாரும் சம்பளம் குறைப்பு பற்றி வாய் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கே. எஸ். ரவிக்குமார் – சத்யராஜ் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் இரண்டு கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் தான் முழு படமும் எடுக்கப்படவுள்ளது. ஷூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.