கோவிட்-19 : நியூயார்க்கில் வசித்து வரும் மலேசியர்களில் குறைந்தது 10 பேர் பலி

கோவிட்-19 தாக்கத்தினால் நியூயார்க் நகரில் வசித்து வரும் மலேசியர்களில் குறைந்தது 10 பேர் மரணமடைந்திருப்பதாக மலேசிய அமெரிக்க சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்சங்கத்தின் தலைவர்  கிம் போங் தமது அறிக்கையில் மரணமடைந்த இருவரின் குடும்பங்கள் சங்கத்திடம் விவரங்களை தெரிவித்திருக்கின்றனர். பலியானவரில் ஒருவர் உணவக உரிமையாளர் ஆவார். மற்றொருவர்  சுரங்கப்பாதையில் பாதிக்கப்பட்டிருந்தாக தொலைபேசி வழி கேட்டறிந்ததாகக் கூறினார்.

கடந்த வாரம் அவர்களின் மரணம் குறித்து தகவல் அறிந்ததாகவும் இத்தொற்றுக்கு மேலும் 30க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கப்பல் மற்றும் மின்னணு வணிகத்தை நடத்தி வரும் கிம், மலேசியர்களுக்கு எம்.ஏ.ஏ இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்து வருகிறோம். நியூயார்க்கில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தொற்றுநோயின் ஆரம்பத்தில் மிகக் குறைந்த நபர்கள் முகக்கவசங்களை  அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மருத்துவமனைகளுக்கு முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலமும், சமைத்த உணவை முன்னணி பணியாளர்களுக்கு அனுப்புவதற்கும்  எம்.ஏ.ஏ உதவி வருகிறது என்றார். தொற்றுநோய் காரணமாக, எம்.ஏ.ஏ உறுப்பினர்கள் நேரில் சந்திக்க முடியவில்லை. நாங்கள் ஆன்லைனில் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

குயின்ஸ் பெருநகரத்தில் ஃப்ளஷிங்கில் கணக்கியல் வணிகத்தை நடத்தி வரும் எம்.ஏ.ஏ இணைத் தலைவர் ஜாக் லியாவ், மலேசியர்களின் இறப்பு அவரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார். நடமாட்ட தடை உத்தரவு  காரணமாக அவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

குயின்ஸில் உள்ள தொற்றுநோயை “மிகவும் மோசமானது” என்று விவரித்த அவர், தங்கள் நாட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள ஒரு இடத்தில்  அவர்கள் உயிரை இழந்தது வருத்தமளிக்கிறது. நிலைமை என்னவென்றால், நியூயார்க்கில் கோவிட் -19 அதிக இறப்புகளின் எண்ணிக்கையின் காரணமா  இறுதிச் சடங்கைப் செய்வது  கூட மிகவும் கடினம்  என்று அவர் கூறினார். நியூயார்க்கில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 23,282 ஆக உள்ளது, இதுவரை 360,000 நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here