இஸ்ரேலில் பரபரப்பு: மக்கள் கூட்டத்தில் திடீரென புகுந்து விபத்து ஏற்படுத்திய கார்

ஜெருசலேம்:இஸ்ரேலின் வடக்கே அமைந்துள்ள ஹைபா நகரின் தெற்கே கார்கர் பகுதியில் வாகனம் ஒன்று நடந்துசென்றவர்கள் மீது இன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளது என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், மக்கள் கூட்டத்தின்மீது வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை  போலீஸார் .பிடித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here