டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து அதிகம் பிரபலமாகி பிறகு சினிமாவில் காமெடியனாக களமிறங்கி பெரிய வெற்றி கண்டவர் சந்தானம். மேலும் காமெடியனாக நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.
அவர் நடிப்பில் இந்த வருடம் ஜனவரி 31ம் தேதி டகால்டி என்ற படம் திரைக்கு வந்தது. அது மிக மோசமான விமர்சனங்களை தான் பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக சாதிக்கவில்லை.
அடுத்து சந்தானம் நடித்துவந்த படம் டிக்கிலோனா. சென்ற வருடம் இதன் ஷூட்டிங் துவங்கிய நிலையில் சில மாதங்கள் முன்பு அது நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சந்தானம் மூன்று விதமான ரோல்களில் இருப்பது காட்டப்பட்டு உள்ளது.ஹீரோ, வில்லன் என மூன்று ரோல்களில் சந்தானமே நடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சந்தானம் இரண்டு ரோல்களில் நடித்திருந்தாலும், அது வெவ்வேறு காட்டத்தில் இருப்பது போல காட்டப்படும். ஆனால் டிக்கிலோனா படத்தில் சந்தானம் ஒரே நேரத்தில் மூன்று ரோல்களில் நடித்து உள்ளார்.