தொற்று ஒரு தொடர்கதை

ஒரு துன்பமான அனுபவத்தை அனுபவிக்கும்போது அதன் பாதிப்பு எங்கிருந்து ஆரம்பமானது என்பதை ஆய்வு செய்வதே சுகாதாரத்துறையின் தலையாயப் பணியாகும். இதையே எல்லா நாடுகளும் பின்பற்றி வருகின்றன. மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

மூலம் அறிந்தால்தான் முறையான் தீர்வு கிடைக்கும். இதுதான் மருத்துவத்தின் தீர்ப்பாக இருக்கமுடியும். இன்றைய புரிதலில் டிங்கிக் காய்ச்சல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.

அரை நூற்றண்டுகளுக்குமுன் மலேரியா என்ற நோய் மலேசியர்களுக்கு எதிரியாக இருந்தது. படிப்படியாக அது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் மலேரியா இருக்கிறது. இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதுபோலவே இடையில் நுழைந்த பல கிருமிகள் கட்டுக்குள் இருந்தாலும் ஒழிக்கப்பட முடியாமல் மறைவாய் வாழ்ந்து சமயம் பார்த்து தாக்குகிறது வருகிறது. பிறகு மறைந்துவிடுகிறது

டெங்கி நோயும் அப்படித்தான். ஒழிக்கப்பட முடியாமல் இருந்துவருகிறது. இப்போது கோவிட் -19 மக்களோடு கலந்திருக்கிறது. அதாவது மக்கள் தோற்று நோய்களோடுதான் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தொற்று நோய்களின் வரலாறு நீண்ட காலத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் தொற்று நோய் வந்துவிட்டதால் இது புதுமையானது என்று கொள்ளாமல் தொற்று நோயோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும். என்கின்றனர்.

கொரோனா என்று வந்ததை அறிந்து மக்கள் அலறினர். இப்போது அலறல் குறந்துவிட்டது. மூன்றே  மாதத்தில் இது பழகிப்போய்விட்டது. இப்போது பயம் சற்றே விலகியிருக்கிறது. தொற்று நோய்கள் வரும். புதுமையான பெயர்களில் வாழும். உயிர்களோடு நோய்கள் ஒன்றித்துவிடும். அனைத்து தொற்று நோய்களும் மனிதர்களின் உடலில் வாசம் செய்வதால் திருமணம் என்று வரும்போது பெண்ணுக்கும் ஆணுக்கும் தொற்றுப்பொருத்தம் இருக்கிறதா என்றும் இருவீட்டாரும் ஜாதகம் பார்க்கும்படி ஆகிவிடும்.

ஒரு தொற்றை முற்றாக ஒழித்ததாக வரலாறு இல்லை தொற்றுகள் மாறிமாறி வருகின்றன. மாறிமாறி புதுப்புது தொற்றை உருவாக்குகின்றன. தொற்றோடுதான் வாழ்க்கை நடத்தப் பழகிக்கொள்ளவேண்டும் என்று மருத்துவமும் கூறுகிறது. வேறு வழி இல்லை.

எதிர்காலத்தில் டெங்கி, கொரோனா, மலேரியா என்ற தொற்றுப் பிரிவிகளுக்கேற்பவே மருத்துவமனைகளும் இருக்கும், தொற்றிலிருந்து குணமாகாமலேயே மனிதன் இருப்பான், வாழ்வான். இறப்பான். இதுதான் தொடர்ந்து நடக்கும்.

அதனால் தொற்றிலிருந்து விலக முடியுமா என்பதை விட்டு, குடைக்கும் வைத்தியத்தில் உயிர்வாழ்ந்து, தொற்றுகளோடு வாழப் பழகிக்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்த தொற்று எப்படி, எதுவாக இருக்கும் என்ற போட்டியும் நடத்தலாம். பரிசுகளும் வழங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here