மாருடியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன

கூச்சிங், பிப்ரவரி 1:

மாருடியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் இன்று சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது.

நகரின் பெரும்பாலான சாலைகள் 0.5 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியதே இதற்குக் காரணம்.

இந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பெய்த கனமழையால் படாங் பாராம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மாருடி வெள்ளத்தில் மூழ்கியது .

தற்போது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு டேவான் சூராவ் மாருடியில் தற்காலிக வெள்ள நிவாரண மையம் (பிபிஎஸ்) திறக்கப்பட்டது.

​​கம்போங் பாடாங் கெர்பாவ் மற்றும் ஜாலான் வாவாசான் கம்போங் சீனா மாருடி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த, எட்டு குடும்பங்களைக் கொண்ட மொத்தம் 31 பேர் இன்னும் பிபிஎஸ்ஸில் தங்கியுள்ளனர்.

மிரி மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைவர் லா போ கியோங் கூறுகையில், மாருடியில் வெள்ள நிலைமையை தமது துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் இன்று வான்வழி ஆய்வுகள் நடத்தப்பட்டது என்றும் கூறினார்.

மிரியில் உள்ள சரவாக் பிராந்திய தீயணைப்பு விமானப் பிரிவு இந்த ஆய்வை நடத்தியது.

“நேற்று நண்பகல் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில், மாருடி நகரைச் சுற்றியுள்ள சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இருந்தும் அவை கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here