போனால் திரும்ப முடியாது

முறையான ஆவணங்களுடன் மலேசியாவில் வேலை செய்யும் அந்நிய பிரஜைகள் தப்பித்து அவர்களின் நாட்டிற்குச் சென்றால் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய முடியாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஓப் பெந்தெங் எனும் நடவடிக்கை மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடுமையான சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கிருந்து சொந்த நாட்டிற்கு பதுங்கி சென்றவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழையாமல் இருக்க இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, முறையான ஆவணம் கொண்டிருக்கும் இந்தோனேசியர் ஒருவர் அவரின் நாட்டிற்குச் சென்று ராயா பெருநாளை கொண்டாடிவிட்டு மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய முயன்றால் அனுமதி வழங்கப்படாது. வெளிநாடுகளிலிருந்து கோவிட் 19 நோய் தொற்று பரவி விடக் கூடாது என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here