அந்தமானும் சென்டினல் பழங்குடியும்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகம் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது.

21.11.2018 அன்று 27 வயதான ஜான் ஆலன் சாவ் என்ற அந்த அமெரிக்கரை, மீனவர்கள் வட சென்டினல் தீவிற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்த பழங்குடியினர் அவரை அம்புகளால் எய்து கொலை செய்து விட்டு அவரது உடலை கடற்கரையோரம் விட்டுச்சென்றனர். 

கொல்லப்பட்டவர் அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த, 27 வயதான ஜான் ஆலன் என்பது தெரியவந்தபோது உலகம் அதிர்ந்து போனது. ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் அரசு செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஆபத்தான அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்தமான், நிகோபாருக்கு வெளியே உள்ளவர்களால் நோயத் தாக்கம் ஏற்படும் என வட சென்டினல் மக்கள் நம்புகிறார்கள்.

அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானது என  பழங்குடியினர் நம்புகின்றனர்.  

நாகரிகத்தில் இருந்து அப்பாற்பட்டு வாழும் சென்டினல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது.

ஜான் ஆலனைக் கொன்ற வட சென்டினல் தீவு பழங்குடியினர் பற்றி தஞ்சை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அவர்கள் சோழ மன்னர்கள் காலத்தில் பாதுகாவலர்களாக பணியாற்றியிருக்கலாம் என நம்புவதாகவும் ஆய்வாளர்கள் இப்போது கூறுகின்றனர்.

ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் அரசு செய்த முயற்சிகள் தோல்வியில்  முடிந்தன.

 இந்த விவகாரத்திற்குப் பிறகுதான் சென்டினல் தீவு பழங்குடி மக்கள் குறித்து வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. ஆலன் படுகொலைக்குப் பிறகு செண்டினல் தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற உத்தரவை அந்தமான் அரசு மீட்டுக் கொண்டது.  இதை தொடர்ந்து செண்டினல் தீவை கண்டு உலகமே அஞ்சி நடுங்கியது. அந்த நடுக்கம் இன்று வரையில் தொடர்கிறது.

இந்நிலையில் செண்டினல் தீவு பழங்குடியினர் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், அதற்கான குறிப்புகள் தஞ்சையில் கிடைத்த சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்தமானைச் சுற்றி 572  தீவுகள் உள்ளன. ஆனால் அவற்றில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகிறார்கள். மீதி தீவுகள் அனைத்தும் மனிதர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை. கிபி 11ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அந்தமான் தீவின் சில பகுதிகள் சோழப் பேரரசின் ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளன.

நிக்கோபார் உட்பட்ட பகுதிக்கு சோழர்கள் அடிக்கடி பயணம் செய்துள்ளனர். இதனால் செண்டினல் தீவு பழங்குடியினர் சோழர்களின் பாதுகாவலராக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய உதவிகளைப் பெற்று அன்றைய மலாயா, சிங்கை வரை அவர்கள் ஆட்சி செய்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

இது குறித்த தகவல்கள் தஞ்சையில் கிடைக்கப்பெற்ற சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துள்ளன. அதில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த மக்களில் சிலர், மெல்ல மெல்லப் பிரிந்து நவநாகரிக உலகத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் சிலர் அதை விரும்பாமல் தங்களை வாழ்விடத்திலேயே தங்கிவிட்டனர். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவுதான் செண்டினல் தீவு பழங்குடி மக்கள்.

வெளியுலகத்துடனான தொடர்பு ஏற்படாமல் இன்னும் அவர்கள் பழங்கால முறையில் வாழ்ந்து வருகின்றனர். கொக்கோ கோலா கிடையாது…. கே.எப்.சி கிடையாது… பீட்ஸா கிடையாது… விவேக கைபேசி மட்டுமல்ல,

வெகு காலத்திற்கு முந்தைய தொலைபேசி தொடர்பு கூட கிடையாது,, ஆனாலும் இவர்கள் இந்த பூமியில் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here