கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஐ நெருங்கியுள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here