சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அமெரிக்காவில் உள்ள போலீசாரால்  கறுப்பினத் தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது சாதாரணக் கொலையாகத் தெரியவில்லை.

ஏன் இந்த வெறித்தனம்? என்பது பலருக்குப் புரியாத செய்தி. கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர் என்பது செய்தி. கறுப்பு என்றால் வெறுப்பு என்பதாக பொருள் கொள்ளப்பட்டால், கொலைதான் முடிவென்றாகிவிடும். கறுப்பினத்தவர்களைக் கொள்ளத்தான வேண்டுமென்பது எந்த நாட்டுச் சட்டம்?

இதில், யோசிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. கொலைக்குக் காரணம் இனமா. கறுப்பு நிறமா?

கறுப்புதான் காரணமென்றால் அதற்கான காரணத்தையல்லவா முதலில் அலசிப்பார்த்துக் கொல்லவேண்டும். அதற்கு இனம் கொல்லப்படவேண்டுமா? ஒரு வெள்ளையரால் கறுப்பின மனிதன் கொடூரமாகக் கொல்லப்படும் காட்சி வைரலாகியிருக்கிறது. உண்மை வைரலால் அமெரிக்கா மீது உலகம் வெறுப்படைந்திருக்கிறது. அதிபர் ட்ரம்ப் இதற்கு நன்கு இசையமைத்திருப்பதாக பல நாடுகள் கூறுகின்றன.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்றால் அதன்பேர் வன்மம். அது கொலையாக மாறலாம். இதற்குத் தண்டனை என்பது நீதியின் வேலை. நிறந்தான் காரணமென்றால் அதற்குக் கறுப்பு என்பதுதான் காரணம். இனம் என்று கருதினால் கறுப்பர்கள் எந்த இனத்தில் சேர்க்கப்படுவார்கள்? குயிலம் என்பது குறையாகுமா?

அவர்களுக்கும் மொழி, கலை கலாச்சாரம், என்றெல்லாம் மாறுபாடு இல்லாமல் இருக்கிறது. அப்படியென்றால் மனித அழிப்புப் பட்டியலில் வெள்ளையர்களின் இனவெறி  இன்னும் மாறாமல் இருக்கிறதா? என்ற ஐயமும் எழுகிறது. வன்மம் உறங்கிக் கிடப்பதால் சீனாவின் கொரோனா குற்றச்சாட்டு நியாயமாக இருக்குமோ என்றும் அரசியல் கை நீட்டுகிறது.

சீனாவின் குற்றச்சாட்டு இதுதான். சீனாவுக்குக் கொரோனா குடியேற அமெரிக்காதான் காரணம் என்கிறார்கள். மனித இனம் அழியவேண்டும் என்ற எண்ணமும் ஒரு தரப்பு அமெரிக்கர்களிடம் தூக்கலாக இருக்கிறதோ!

தங்கள் மீதான குற்றச்சாட்டை மூடிமறைக்கும் அமெரிக்கா, வெள்ளையர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது என்றும் கூறுகின்றனர். கறுப்பர் கொலைக்குக் கரிசனம் காட்டுகிறார் என்றால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்கிறாரகள்.  அதிபர் தேர்தல் நெருங்குவதால் ஆட்டம் அதிகமாகவும் இருக்கலாமல்லவா? இருக்கலாம் என்ற ஆரூடங்களும் வலுக்காமல் இல்லை.

ஆதாயம் இல்லாமல் எந்த மனிதனும் செயல்படமாட்டான் என்பதற்கு கொரோனா ஓர் எடுத்துக் காட்டாகவே பேசப்படுகிறது. ஒன்றைப் பரப்புவதற்குப் பின்னணி இல்லாமல் இருக்காது. மனித அழிப்புக்கு அமெரிக்கா துணைபோகிறதா என்று ஐயப்பட வைக்கிறது.

மனிதனே மனிதனை அழிக்கத் தயாராகிவிட்டபின், மிருக வேட்டைக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

வன்முறைக்குத் தலைமை தாங்க அமெரிக்கா ஆயத்தமாகிவிட்டதா என்றும் எண்ணத்தோன்றுகிறது. அப்படி இருந்தால்  அமெரிக்காவின் கற்பு அமெரிக்கக் கறுப்பர்களால் பறிபோவதும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here