தீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.

இதனால் எவ்வளவு பெரிய திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும். வீடுகளில் ஏற்படுகின்ற தீபங்கள் இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இடர்பாடுகளை தருகின்ற தீவினைகளையும், தீயசக்திகளையும் பஸ்மம் செய்கிறது. ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி ஒளிமயமான வாழ்க்கையையும், பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.

ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும். தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் இழுத்து பஸ்மம் செய்கிறது. தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் மாசுகள் பஸ்மம் செய்யப்படுகின்றன. மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. முகத்தில் தேஜஸ் உண்டாகிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here