சும்மா இருப்பதே சுகமல்ல

நாட்டின் விளையாட்டுகளில் கோல்ஃப் விளையாட்டுப் பக்கம் திரும்புவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றாகிவிட்டதா? இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது.

இப்போது, பள்ளிகள் விடுப்பில் இருக்கின்றன. பாடங்கள் இணையத்தின்  வழி  நடைபெறுகின்றன. இது மாற்றத்தின் அறிகுறி அல்ல. முழுமையான மாற்றத்தில் மக்களின் பார்வையும் ஆசிரியர்கள், மாணவர்களின் பார்வையும் திரும்பியிருக்கிறது.

இப்போது, கல்வித்துறையின் சிந்தனைக்குப் புதிய  அர்த்தங்கள் பெயர் சூட்டப்படுகின்றன, சூட்டிக்கொண்டும் இருக்கின்றன. இந்த ஏமாற்றத்திலும் முன்னேற்றகரமான மாற்றங்கள் தெரிவதற்கு கடப்பாடுகள் உள்ளவர்களே காரணம்.

கல்வித்துறையும் அப்படித்தான இருக்கவெண்டும் என்பதில் அர்த்தமிருக்கிறது. இன்றைய பொழுதில் மாணவர்கள் கணினியோடு இருக்கும் நேரம் அதிகம். இணையக்கல்வி என்று இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

கல்வியிலேயே மாணவர்கள் மூழ்கிக்கிடப்பதும் முடியாத காரியம். மாற்றுச் சிந்தனைகள் மல்லிகை வாசமாய் இருக்க வேண்டும். மற்றுச் சிந்தனைகளில் இந்திய மாணவர்களின் தூரம் என்ன என்பதை எவரும் குறிப்பிடவில்லை. எங்கிருக்கிறார்கள் என்றும் தெளிவில்லை.

பொதுக்கருத்துகளில், பொழுது போய்க்கொண்டிருக்கிறது. எல்லா பள்ளிகளும் இணையத்தில் இல்லை. அப்படியிருக்க இணையக்கல்வி எங்கிருந்து வரும்? எத்தனை பேரிடம் இணைய வசதி இருக்கிறது என்று பள்ளிகளுக்கே தெரியாது. அந்த அளவில் பட்டியல் இல்லை. பாடம் புகட்டும்  தனித்திறன் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

இணையக்கல்வி இணைக்கப்ட்டிருந்தால்  இமயத்தை நோக்கிக் கைகூப்பலாம். இறைவன் தெரிவான். ஆனால், இணையக்கல்வியில் தமிழ்ப்பள்ளிகளின் எல்லைக் கல் எதுவென்று அடையாளம் காணப்படவில்லை.

இந்திய மாணவர்கள் கைவிடப்பாட்டிருக்கும் உணர்வே மேலோங்கியிருக்கிறது. என்ற பயம் பெற்றோர்களுக்கு அதிகமாகவே வந்துவிட்டது. இன்னும் பள்ளி திறக்கவில்லையே என்று உச் கொட்டுகிறார்கள்.

இணையக்கல்வியில் இரண்டறக் கலந்திருக்கும் மாணவர்கள் அதிர்ஷடசாலிகள். இல்லாதவர்கள் இணையத்தளக் கடைகளுக்கும் செல்ல முடியது.

இணைத்தளத்தில் இருக்கும் சில மாணவர்களுக்காவது ஏதாவது பொழுதுபோக்கு இருக்கிறதா. அந்தப் பொழுதுபோக்கு விளையாட்டுக் கல்வியாக இருக்கிறதா? அப்படியிருக்கும் சாத்தியம் இல்லை என்பதுதான் பதிலாக வருகிறது.

பொது விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், புது விளையாட்டுகளை தெரிந்துகொள்ளும் இணைய கல்வியாவது இருக்கிறதா? அல்லது இந்த விளையாட்டு இருக்கும் தளத்தையாவது அறிமுகப்படுத்த முடிகிறதா?

கோல்ஃப் ஒரு சிறந்த விளையாட்டு . இது பற்றியும் இந்திய மாணவர்களுக்கு அறவே தெரியாது. இந்த விளையாட்டில் மாணவர்களின் கவனம் திரும்பினால் பின்னர் அதில் ஈடுபாடு ஏற்படக்கூடும். அப்படிச்செய்யும் புதுமை சிந்தனைக்கு ஆசிரியர்க்சள் மாறலாமே!

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி. இந்திய மாணவர்களின் விளையாட்டு இடைவெளியாக மாறாமல் இருக்க, இந்திய மாணவர்களை இணைய விளையாட்டில் ஈடுபடுத்தப் போகின்றவர்கள் யார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here