துடைத்தொழித்தல் தொடர்கதையா?

கள்ளக் குடியேறிகளுக்கு மன்னிப்பு கிடையாது. இந்த வார்த்தைக்கு வயது அதிகம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அடகுக்கடையில் வைத்த பழமையான அடகுப்பொருளாக இந்த வார்த்தை இருக்கிறது. இவ்வார்த்தை மீட்கப்படாமல் கைவிடப்பட்டு, இப்போது புதுப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கோவிட் -19 காலத்தில் சட்டவிரோத அந்நியர்களுக்கு பொது மன்னிப்பு கிடையாது என்பதன் அர்த்தம் விளக்கமானதாக இல்லை.

கோவிட் 19  பாதிப்பில் இருக்கும் அந்நியப் பிரஜைகள் குணமானதும் அவர்களின் ஊருக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது பேச்சு. பிப்ரவரி ,மார்ச் மாதத்தில்  இப்பேச்சு முத்தாய்ப்பாக இருந்தது.

கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் சோதனைக்கு வரவேண்டும். அவர்களுக்கான குடிநுழைவு ஆவணங்கள் முதன்மையல்ல என்று கூறியது ஞாபகமிருக்கலாம். வைத்தியச் சோதனைக்குப்பின் அவரவர் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டது.

யாரும் கைது செய்யப்படமாட்டார்கள். சோதனைதான் முக்கியம் என்பதால் முன்வந்து சோதனை செய்துகொண்டார்கள். கைது செய்யப்படாமல் திருப்பி அனுப்பினாலும் பரவயில்லை என்ற முடிவில் அந்நியர்கள் சிலர் தளர்வுக்கு இணங்கினார்கள்.

இதில், பலர் முன்வரவே இல்லை.. வந்தால் என்ன ஆகுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு வந்திருக்க வேண்டும். அதனால் வரவில்லையோ! அதுதான் உண்மை. இருக்கலாம். இப்போது ஆவணம் இல்லாதவர்களுக்கு ஆப்பு நிச்சயம் என்பதுபோல் பொதுமன்னிப்பே கிடையாது என்பது அழுத்தமானதாக இல்லை.

பலதடவை, ஆவணமில்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு, சுவரில் வீசிய பந்தாக வந்தவர்கள் அதிகம். அவர்கள் எப்படி வந்தார்கள்  என்பது பிரம்ம ரகசியம்.

இப்போது, கள்ளக்குடிய்றிகளுக்கு மன்னிப்பு இல்லை என்பது புதுப்புக்கப்பட்ட வார்த்தையாகும். கள்ளக்குடியேறிகளை அடியோடு ஒழிக்கத்தான் வேண்டும் என்றால், சட்டத்தில் ஓட்டை இருக்கக் கூடாது.

திரும்பி வரும் பந்துகளால் ஆபத்தே இனி அதிகமாக இருக்கும். கொரோனா ஓய்ந்துவிடாது. அது பல பரிணாமங்களில் உலவும். அந்நியர்கள் இதைக்கொண்டுவருவர். ரகசியமாக உள்ளெ பரப்பிவிடுவர். இதுதான் நடக்கும். இதற்கு, பொது மன்னிப்பு என்ற வார்த்தை மலேசிய அகராதியில் இருக்கக்கூடாது. துடைத்துச் சுத்தம் செய்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here