பெட்டாலிங் ஜெயா: எட்டு கார்களின் விண்ட்ஸ்கிரீன்கள் மற்றும் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டதை அடுத்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கோத்தா டாமான்சாராவில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தத் தொடங்கினர்.
மார்ச் 20 ஆம் தேதி எட்டு கார்கள் சேதமடைந்துள்ளன என்று கோத்தா டாமான்சாரா காவல் நிலையத்தில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. கார்கள் சேதப்படுத்தியதற்கான எந்தவொரு பொருட்களும் காணவில்லை என்றும், அந்த பகுதியில் சி.சி.டி.வி அல்லது பாதுகாப்பு காவலர்கள் ரோந்து இல்லை என்றும் துணை பெட்டாலிங் ஜெயா ஒ.சி.பி.டி மஷாரிமன் மஹ்மூத் புதன்கிழமை (மார்ச் 31) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சாட்சிகள் இல்லாததால் சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.









