மலேசிய சுற்றுலா மங்கிக் கிடக்கிறதா?

மலேசியச் சுற்றுலா மங்கிடக்கிறது. சுற்றுலாத் தளைங்கள் சோம்பிக்கிடக்கின்றன. இப்படித்தான் கூறவேண்டியிருக்கிறது. இவையாவும் மடிந்துபோகும் வார்த்தைகள்.

வேறு வழியில்லை. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. காலம் கனியவில்லை என்று  மனதைத் தேற்றிக்கொள்ளத்தான் வேண்டும் என்றால், பல ஆயிரம் தொழிலாளர்களின் கதி அதோகதிதான் என்றாகிவிட்டதே! இதற்கு என்னதான் வழி. யார்மீது பழி?

தொற்றின் காலத்தில் தொடங்கிய சோதனை இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை. இதற்கான விடை மூடிய கோப்பாகவே இருக்கிறது.,

பலதொழிலாளர்கள் பட்டினி இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். அரசாங்கத்தின் உதவி பெரிதாக இல்லை. எப்படித்தான் ஆகுமோ என்பதுதான் அடுத்த கட்ட இடராக இருக்கிறது..

சுற்றுலாத்றை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கிறது. விடுதிகள் விடியலை நோக்கிக் காத்துகிடக்கின்றன. உதயம் எப்போது வரும் என்பது வெறுங்கனவாகவே இருக்கிறது.

விரைவில், இதுவும் கடந்து போகும் என்று எப்படித்தான் காலத்தைக் கடத்துவது. தொழில்கள் தொடங்கபடும் அறிகுறி பிறை நிலவாய்த்தெரிகிறது. வளர்பிறை வாய்ப்பாக மாறிவருகிறது.

சுற்றுலாத்துறைமட்டும் நோயாளிபோல் தொய்வடைந்திருக்கிறது என்பதெல்லாம் உண்மை.

மீண்டும் என்ற ஒரு வார்த்தை முளைக்கும்போது விடுதிகள் பழைய முனைப்போடு செயல்பட சிலகாலம் பிடிக்கலாம். உலகம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்குள் நம் நிலமை என்ன?

மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் ஜப்பானியர்கள் நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். அவர்களும் வாழ்கிறார்கள். புயலும் எரிமலையும் அவர்களுக்குப் புதிதல்ல அனைத்தும் பழகிப்போய்விட்டது. பழகிக்கொள்ல நிறைய இருக்கிறது.

பந்துவிளையாட்டில் பந்தை நிறுத்தி, பின்சென்று உதைத்தால் கோல் என்கிறார்கள். நாமும் அப்படித்தான் இருக்கவேண்டும். பின்னோக்கிச் செல்வது தோல்வியல்ல. முன்னோக்கிச் செல்வதற்கான முயிற்சி.

புதியவற்றுக்கு மாறும்போது சுற்றுலா மீண்டும் எழும். சோம்பிக் கிடந்தவர்கள் சுறுசுறுப்போடு சுற்றுலா வருவார்கள் அப்போது அவர்களுக்கு வேண்டியவை கொட்டிக் கிடக்கவேண்டும். நாம் தயாராக இருக்கிறோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here