மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’.
இந்த படம் தமிழில் ‘மாறா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், படம் குறித்து எந்தவித தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மாதவன் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி மாறா படக்குழு படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பை லாக்டவுன் முடிந்தவுடன் ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.