கோவிட் 19 நோய் தொற்றுக்கு 19 பேர் இலக்காகியிருக்கும் வேளையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
19 தொற்றுகளில் 7 பாதிப்பு வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 3 பாதிப்பு அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்டதாகும். 9 பதிப்பு மலேசியர்களுக்கு ஏற்பட்டதாகும்.
61 வயது நிரம்பிய ஒருவர் இந்நோயினால் இன்று மரணமடைந்திருக்கும் வேளையில் மொத்த மரண எண்ணிக்கை 116ஆக பதிவாகியுள்ளது.
51 பேர் இன்று குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,540 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவை படுகின்றன.
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,266ஆக உயர்ந்திருக்கும் வேளையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,610ஆக பதிவாகியுள்ளது.