தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) 4 ஆம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களின் சிறைசாலைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி

கோலாலம்பூர், அக்டோபர் 27 :

தற்போது தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) 4 ஆம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களின் சிறைச்சாலைகளில் கைதிகளை மீண்டும் பார்வையிடுவதற்கு சிறைத்துறை அனுமதித்துள்ளது.

எவ்வாறாயினும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்றும் முக்கியமாக முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே சிறைச்சாலையில் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று சிறைத்துறைத் திணைக்களம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பார்வையாளர்கள் i-visit.prison.gov.my என்ற இணையத்தள முகவரியிலோ, தொலைபேசி அழைப்புகள் அல்லது சிறை நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அல்லது கடிதங்களை அனுப்புவதன் மூலம் தங்கள் வருகைக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.

“முன்பதிவு செய்த பிறகு, சிறைத்துறை நிர்வாகம் ஒரு தேதியை நிர்ணயம் செய்யும், மேலும் வருகையாளர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும் .

“மேலும் இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் (ஒவ்வொரு கைதிக்கும்) மற்றும் முன்பதிவுகள் இன்றி (walk-in முறைக்கு அனுமதி இல்லை) யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

“60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாகவும் எந்த தொற்றுநோய் அறிகுறிகளும் இல்லாமல் இருந்தால் மட்டுமே (பார்வைக்கு) அனுமதி வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு பொதுமக்கள் சிறைத்துறை இணையதளமான www.prison.gov.my ஐ அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here