‘சூரரைப் போற்று’ சென்சார் ரிசல்ட்

சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. யு சர்ட்டிபிகேட் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here