நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டினை மீறிய குற்றத்திற்காக 31 பேருக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா டத்தாரான் ஸ்குவேர் எனும் இடத்தில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில் 25 ஆண்களும் 11 பெண்களும் என 36 பேர் இருந்துள்ளனர்.
அந்நிய பிரஜையை மையத்தில் வேலைக்கு அமர்த்திய காரணத்திற்காக உள்ளூர்வாசியான ஒருவர் கைது செய்யப்பட்டார். அதோடு சுற்றுலா விசா மீறல் குற்றத்திற்காக இரு அந்நிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர். மேலும இரு அந்நிய பிரஜைகளின் ஆவணங்கள் சோதனையிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அந்த மையத்தில் வேலை ஆட்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் இருந்த 31 பேருக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.