காப்புறுதி காப்பாற்றுமா?

கிருமித்தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை ஏற்புடையதாக இருக்குமா என்ற கேள்வி உருவானால் பதில் என்னவாக இருக்கும்?

கோவிட் தொற்றுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இந்தச்சூழ்நிலையில் மாற்று மருந்தாக எச் ஐ வி மருந்துடன் பிற கலவைகளைக் கலந்து கொடுத்து காப்பற்றிவருகிற பெருமை சுகாதார அமைச்சுக்கு இருக்கிறது. அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஷாம் இப்பெருமைக்குரியவராக விளங்குறார்.

இத்தொற்றில் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் சாதாரண மக்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைதான் மருத்துவத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அரசு பொது மருத்தமனைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

தொற்று பயம் முழுமையாக நீங்கும்வரை அரசு மருத்துமனையே பாதுகாப்பாக இருக்கும். கொரோனா தொற்றுக்கென சில மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு சிகிச்சை பெறுவதைத்தான் பாதிக்கப்பட்டவர்களும் விரும்புகிறார்கள். இதில் நிதிப்பிரச்சினையும் இருக்கிறது.

சாதாரண மக்களால் தனியார் மருத்துவமனைக் கட்டணங்களைச் சமாளிக்க முடியாது. மருத்தவ காப்புறுதி அட்டைடியிருந்தால்  முடியுமா என்பதற்கும் இன்னும் விளக்கங்கள் இல்லை. இதற்கெல்லாம் விரைவுத் தீர்வாக அரசு பொது மருத்துமனைகளே சிறந்த இடமாக இருக்கிறது.

காப்புறுதி விதிகளில் கொரோனா, அல்லது அதன் தொடர்புடைய தொற்றுக்கான மருத்துவம் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதில் பாலிஸிதாரர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த சந்தேகம் நியாயமானதுதான். சந்தேகதத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு காப்புறுதி நிறுவனங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சந்தேகம் தீரும்வரை தனியார் மருத்துவமனைகள் மீது பார்வை பதியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here