குறையாது கொரோனா

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியால் தத்தளிக்கும் நேரத்தில் இனக்கலவரங்கள் வெடித்திருக்கும் அமரிக்காவில் தொற்று குறையும் என்ற நம்பிக்கை பெரிதாகத் தளர்ந்து வருகிறது.

உலக நாடுகளின் சுகாதாரப் பிரிவுகள் இதற்கான எச்சரிக்கையை முன் வைத்திருக்கின்றன. கலவரங்களில் கலந்துகொள்கின்றவர்கள் நிச்சயமாக சமூக இடைவெளியைப் பின்பற்றவே மாட்டர்கள். பின்பற்றவும் முடியாது.

கோவிட் தொற்றுக்கு முதல் வைத்தியமே சமூக இடைவெளிதான். சமூக இடைவெளி  இனக் கலவரங்களால் சிதைந்துவருக்கிறது என்பது உலக அச்சமாக இருக்கிறது. மீஈண்டும் கோவிட் அச்சம் உருவெடுத்திருக்கிறது.

ஓர் அமெரிக்க கறுப்பர் வெள்ளையரால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த செய்தி வரலானதால் இனக்கலவர வெடிப்பில் அமெரிக்கா சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. இதனால் இனக்கலவரம் முற்றி ஆர்ப்பாட்டங்கள் பெருகிவிட்டன. ஆர்ப்பாட்டங்களால் கொரோனா குறைவதாக இல்லை என்று அமெரிக்கர்களே அஞ்சுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here