‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.
படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது லாக்டவுன் சமயத்தில் தனுஷ் அப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.