மாஸ்க் அணியாமல் 2 கோடி ரூபாய் அபராதம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகமும், மாநகர போலீசும் அறிவித்திருந்தன.
இதன்படி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், முக கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம் வந்த ஆயிரக்கணக்கானோர் மீது மொத்தம் 40,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்து அபராதமாக தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 5. 89 லட்சம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்; 4.5 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

அத்துடன், பொதுமுடக்க காலத்தில் இவ்வாறு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக மொத்தம் 10.44 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here