இந்திய மக்களுக்கு இன்றுதான் தைப்பூசமா?

தைப்பூசம் வரும்போதெல்லாம் முடி காணிக்கை என்பது முத்தாய்ப்பான செய்தியாக இருக்கும்  தைப்பூசம் பூச நட்சத்திரத்தில் வரும். தைப்பூசம் கொண்டாடி முடிகாணிக்கை தருவது என்பது முருகனுக்குத் தலையையே தருவதற்கு ஒப்பாகும்.

தைப்பூசம் முடிந்து, மீண்டும் முடிவளர்த்து, முருகனுகுக்கான நேர்த்திக்கடனில் மொட்டை போடுவது என்பது முருகன் மீதுள்ள நம்பிக்கையைக் கூட்டுவதாக இருக்கும். இதுதான் வழிவழியாக நடந்துவரும் பழக்கம் . அந்தப் பழக்கத்தில் சின்ன மாற்றம் எற்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் தைபூசத்திற்குப்பிறகு அடுத்த நான்கு மாதங்கள் முடிவளர்க்கலாம் என்ற காட்டாயத்தை எற்படுத்திவிட்ட கொரோனா நல்லவனா? கெட்டவானா, ஆண் பாலா பெண்பாலா?

முப்பால் அளக்கும் முருகனையே  அமைதியாக்கிவிட்ட கொரோனா, ஓர் அர்த்த நாரியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.

முருகன், மயில் வாகனத்தில் உலக வலம் வந்தான் என்பது புராணம். கொரோனா வந்தது எப்படியென்று மட்டும் தெரியவே இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் பரவியது என்றால், இறைவனையே ஏமாற்றியிருக்கிறது என்று நம்பவும் இடமிருக்கிறதே!

முருகன் ஏமாந்தானா? எமாறுவதுபோல் நடித்தானா? துஷ்டனைக்கண்டால் தூர விலகியிருப்பது மேல் என்று மெளனமாகிவீட்டானா? ஒன்று மட்டும் நிச்சயம் முருகன் அழகன் . அவன் அழகாக இருக்க மனத்தாலும், உடலாலும் சுகாதாரத்தைப் பேணினான். அதை உணர்த்த நாடகம் ஆடினானா?

மக்களுக்கு இதெல்லாம் பிரச்சினை இல்லை. அனால் ஒவ்வொருவரையும் கூடல்வெளி தூரத்தில்தான் வைத்திருக்கிறான். அதை சுகாதார தலைமை இயக்குநர் வழி நடத்திக்கொண்டிருக்கிறான்.

முருகனின் கட்டளைக்குப் பணிந்து கொரோனா செயல்படுகிறதா? அப்படித்தான் மாறிவிட்டது. அமைதிக்கு முகமூடி ஆதாரம்.

வளர்ந்துவிட்ட முடியைக் காணிக்கை செலுத்தும் நாளும் தைப்பூசம்தான்.  முடிதிருந்தும் கடை நடத்துகின்றவர்கள் உற்சாகத்தோடு முடிதிருத்தவும் மொட்டை என்றும் வெகு பிசியாகிவிட்டார்கள் என்பதும் முருகன் செயலே!

பிரதமர் அறிவித்த இந்நாள் முடியிறக்கும் நாள் என்றால், அந்நாள் இந்நாள் ஆகட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here