கோலாலம்பூர்,
மாணவி சாரா கைரீனா மகாதீர் மரணம் தொடர்பான விசாரணையில் எந்தவித ஒளிவு மறைவோ அல்லது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியோ நடைபெறவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் உண்மையான தகவல்கள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் சட்டபூர்வமான ஆவணங்கள் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.
“விசாரணை தொடங்கியது முதல் உடற்கூறு (post-mortem) முடிவுகள் வரை, எந்த தரப்பினராலும் வழக்கை மூடிப்போடும் முயற்சிகள் நடைபெறவில்லை. நியாயம் என்பது சட்டம் மற்றும் சம்பவத்திற்கான ஆதாரங்கள் அடிப்படையாகவே இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
சாரா கைரீனாவின் உயிரிழப்பு மிகவும் வேதனையானதும், முக்கியத்துவமும் வாய்ந்த சம்பவம் என்பதால், விசாரணைகள் அனைத்தும் தெளிவாகவும் சரியான சட்ட நெறிப்படுதலின் கீழும் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் கூறினார்.




















