உறுப்புதானம் உயர்ந்த தானம்

உடல் உறுப்புகள் தானம் செய்கின்றவர்கள் தெய்வத்திற்குச் சமம் என்பார்கள் இதைச் சொல்கின்றவர்கள் அதிகம். செய்கின்றவர்கள் குறைவு. மலேசிய நாட்டில் உடலுறுப்புதானம் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் உறுப்புதானம்  செய்கின்றவர்கள் மிகக்குறைவு.

அமெரிக்கத் தலைநகரிலிருந்து ஒரு செய்தி. உடலுறுப்பு தானத்தின் சிறப்பைக்கூறுகிறது. உயிர் பிழைத்திருக்கிறார் யுவதி.

20 வயது இளம்பெண் கோவிட் 19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சுவாசிக்கும் இயந்திரம் இவரின் உயிரைத் தக்கவைத்துக் காப்பாற்றி வந்தது. தேவை உறுப்புதானம்.

ஆறு வாரங்கள், இவர் சிறப்புப்பிரிவில் சிகிச்சை பெற்றார். இவரின் சுவாசக்குழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவரைக் காப்பாற்ற ஒரே வழி சுவாசக்குழாய் மாற்றுசிகிச்சை. அதற்கு உறுப்புதானம் தேவையாக இருந்தது.

இவரின் ஆயுள் மிகக்கெட்டி. இவர் வாழ வேண்டும் என்றால் யாரெனும் உயிர் விட வேண்டும். யாரோ ஒருவர் உயிர்துறந்து உறுப்பை பரிசாகக் கொடுத்திருக்கிறார். இப்பெண்ணுக்கு மீண்டும் வாழ்வு கிடைத்திருக்கிறது.

சிக்காகோ நோர்த்வெஸ்டெர்ம் மெமோரியல் மருத்துவமனையில் உறுப்புமாற்றம் அறுவைச் சிகிச்சையில் அவர் பிழைத்து தேறிவருவதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here