கோலாலம்பூர்:
மலேசியா, புரூணை இடையிலான அரசு தந்திர உறவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

புரூணை பட்டத்து இளவரசர் பெங்கிரான் முடா மகோத்தா அல்-முக்தி பில்லாஹ் சுல்தான் ஹசானல் போல்கியாவைச் சந்தித்தபோது இந்த விவாகரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, எல்லை விவகாரங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பிரதமர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் ஆசியான் உறுப்பு நாடுகளில் புரூணை மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது.





















