சுழியம் என்றால் சுதந்திரம் உண்டு

பள்ளிப்பாடங்களில் சுழியம் என்றால் கல்வி ஏறவில்லை என்பார்கள். எத்துணைப் படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் போனால் தோல்வியைத்தான் தழுவ வேண்டிவரும். அதைக் குறையென்று பேசுகின்றவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிற குறைகள் இருக்கும் அது குறையாகத் தெரியாது.

குறைய வேண்டும் என்பது குறையாகப் பேசப்படுவதில்லை. அது கொரோனாவைக் குறைக்கும் நிறவான முயற்சி.

ஒரு விஷயத்தில் குறை என்று வருகிறதென்றால் அது அந்த மூளைக்கு ஒவ்வாமையாக இருக்கிறது என்று பொருளாகும். ஒவ்வாமையைத் திணிப்பது சில வேளைகளில் தீமையாகத்தான் இருக்கும்.

கொரோனா விஷயத்தில் சுழியம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த எண்ணமாக இருப்பதால் அதற்காக சிரத்தை எடுத்துக்கொள்வது ஒவ்வாமையென்று ஒதுக்கிவிட முடியாது.

இதைத்தான் தலைமை சுகாதாரத்துறை அமைச்சர் சவாலாக முன் மொழிந்திருக்கிறார். அவரின் ஒரே கேள்வி இதுதான். சுழியம் என்பது லட்சியமாக இருந்தால் நாடு பழைய நிலைக்கு வந்துவிடும். பழைய நிலை என்பது, வழக்கமான, சுமூகமான நிலை. இதற்காகத்தான் சுகாதாரத்துறை மிகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறது. முன்னணிப் பணியாளர்களும் இரவு பகல் என்று பாராமல் போராடினார்கள்.

அவர்களின் முயற்சி வீண்போகவில்லை. கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. முதியவர் மட்டுமே பிற காரணங்களாலும் இறந்திருக்கிறார்.

அபார முயற்சியின் பலன் இது. இன்னும் 28 நாட்களில் இது சுழியமாக இருந்தால் உலகப் பார்வை உயர்வாக விழும். அதனால் நமக்குத்தேவை சுழியம்.

சுழியத்தைப்பெற அன்றாட நடைமுறைக் கட்டுப்பாடுகளை அனுசரித்தாலே போதும். அது நம்கையில்தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here