சந்திப்புகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் என்பதற்கு விரைவில் விடிவு காலம் பிறக்குமென்று முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடி காட்டியிருக்கிறார்.
நாட்டில் 171 ஆலயங்கள் வாரத்திற்கு ஒருநாள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் 30 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும் என்றிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சாதகமான காலம் நெருங்கிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்,
மாணவர்களுக்கான கருத்தரங்குகள், சந்திப்புகளுக்காக ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். பயிற்சிகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் வழி பிறக்கும் வகையில் நாட்டின் தொற்று ஒதுங்கிக்கொண்டிருக்கிறது என்றார் அவர்.
அனைத்தும் மக்களின் நடமாட்ட கட்டுப்பாட்டில் இருந்துதான் மதிப்பிடவேண்டும். இன்னும் அதுபற்றிப் பேசப்படவிருக்கிறது. வரும் திங்கட்கிழமை கூடவிருக்கும் சந்திப்பில் சுகாதாரத்துறையுடன் அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் யாக்கோப் சந்திப்பு நடத்தியபின் சாதகமான பதில் வரும் என்ற நம்பிக்கையை பதிவு செய்திருக்கிறார்.
இந்தப்பதிவில் முஸ்லீம் அல்லாத மக்களுக்கான சாதகங்கள் இருக்குமென்றும் பேசப்படுகிறது. ஆலயங்களுக்கான புதிய விதிமுறைகள் மாற்றம் பெறும் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சிடிக் கூறியிருப்பது ஆறுதலான செய்தி.
அடுத்த வாரம் புதிய மாற்றம் பெறும்போது ஆலயங்கள் யாகத்தில் மூழ்கிவிடும்.