மகன், மகள்கள் கவனிக்காததால் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை

மகன், மகள்கள் கவனிக்காததால் மன உளைச்சலில் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வயல்சேரி கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் குண்டுமலை (78). இவரது மனைவி கருப்பி (75).

இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை கதவுகள் திறந்து இருந்த நிலையில் இருவரும் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

பழையனூர் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.

மகன் கருப்பணம்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். மகள்கள், மகன் ஆகியோர் தம்பதியரை சரியாக கவனிக்கவில்லை எனவும், இதனால் மன உளைச்சலில் தவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here