கோலாலம்பூர்,
வேகக் கட்டுப்பாட்டு சாதனமான Speed Limiting Device (SLD) பொருத்தப்படாத வர்த்தக வாகனங்கள் அக்டோபர் 1 முதல் சாலைகளில் அனுமதிக்கப்படாது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின் கீழ், எஸ்.எல்.டி இல்லாத கனரக வாகனங்கள் சோதனையில் தோல்வியடையும். “இந்த SLD சாதனம் பேருந்துகள் மற்றும் லோறிகளால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் முக்கியமான பாதுகாப்பு முயற்சி,” என அவர் மக்களவையில் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் இது கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
“இதை பொருத்துவதில் சிலர் செலவு காரணமாக தயங்கலாம். ஆனால் மனித உயிர்கள் அதிக முக்கியம். அரசு நடவடிக்கையை எல்லோரும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
அதன் செலவுகள், பராமரிப்பு, மற்றும் சாதன தோல்வி சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பாதுகாப்பையே முதன்மைப்படுத்த வேண்டும் என்றார்
























