எனக்கு கல்யாணமா? – நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஒருவர் ”ஏன் என்கிட்ட சொல்லல”னு கேட்டதற்கு ‘எனக்கே இப்போ தான் தெரியும்’ என்று ஹன்சிகா பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here