சிலாங்கூர் மாநில துணை சபாநாயகரும் பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு துணை தலைவருமான டாக்டர் டரோயா அல்வி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கட்சியில் தாம் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்தார்.
கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தன்முப்பான செயலால் கட்சியின் எதிர்காலம் கேள்விகுறியானது மட்டுமின்றி கட்சிக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சாடினார்.